என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை வாலிபர் கொலை"
- வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது23). இவர் பி.ஏ. படித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கடந்த 4-ந்தேதி இரவு சூர்ய பிரகாஷ் தனது நண்பர்களுடன் சென்றார்.
அவர்கள் மதிச்சியம் அம்பலத்தார் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 10 பேர் கும்பல், இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளது. இதனை கண்ட சூர்ய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது. அவர்கள் கைக்குட்டையால் அவரது கழுத்தை நெரித்தனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சூர்யபிரகாஷ் மயங்கி விழுந்தார். இதனால் அச்சமடைந்த 10 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
இதையடுத்து சூர்ய பிரகாசை அவரது நண்பர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிளை கண்டுபிடிக்க சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சூர்ய பிரகாசை தாக்கியவர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். கொலையுண்ட சூர்ய பிரகாஷ், ராஜரத்தினத்திற்கு ஒரே மகன் ஆவார்.
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 25-ந் தேதி மதுரையில் இருந்து சரவணன், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரில் கொடைக்கானல் வந்தனர். பின்னர் காரை திருப்பி அனுப்பி விட்டனர்.
கொடைக்கானலில் நண்பர் ஒருவரின் காரை வாங்கி பல இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். இரவில் வட்டக்கானல் பகுதியில் ஒரு விடுதியில் தங்கினர். பின்னர் மணிகண்டனை தனியாக அழைத்துச் சென்ற சீனிவாசன் என்பவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசிச் சென்றார்.
பின்னர் சரவணன், சீனிவாசன், சபரி, மகான் ஆகியோர் வேறு இடத்தில் அறை எடுத்து தங்கினர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது சீனிவாசனை தவிர மற்றவர்கள் தலைமறைவாகினர். இதனிடையே மணிகண்டனை காணாமல் அவரது பெற்றோர் ஜெய்ஹிந்த் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது. இதனையடுத்து சரவணன் மற்றும் அவருடன் தங்கி இருந்த நண்பர்களை அழைத்துக் கொண்டு வட்டக்கானல் பகுதிக்கு வந்தனர்.
நேற்று இரவு வரை தேடியும் உடல் கிடைக்காததால் இன்று மீண்டும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து உள்ளனர்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மோகன்ராஜ் (வயது 21). கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி (21), ஆலங்குளத்தைச் சேர்ந்த நாகசூர்யா (21), செல்லூர் கேசவமூர்த்தி (22) ஆகியோருடன் கடந்த மாதம் 3-ந் தேதி கோவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
மீண்டும் 2 மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் 4 பேரும் மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது கொடைரோடு அருகே 4 வழிச் சாலையில் பொட்டிசெட்டி பிரிவில் மோகன்ராஜ் 4 பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மோகன் ராஜூடன் வந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக இக்கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். சம்பவத்தன்று சோழ வந்தான் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மோகன் ராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வாகன தணிக்கையில் பிடிபட்ட மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி மகன் புலிக்குட்டி (22), கார்த்தி மகன் ஆப்பிள் கார்த்தி (22) ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது கடந்த மாதம் 3-ந் தேதி அன்று மோகன்ராஜ் அவரது நண்பர்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகியோரும் 2 மோட்டார் சைக்கிள்களில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர்.
அனைவரும் மது அருந்தி இருந்ததால் மோட்டார் சைக்கிளை அதிக வேகத்துடனும், மோட்டார் பந்தயத்தில் செல்வது போல சாகசம் செய்தவாறும் சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில்தான் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட புலிக்குட்டி மற்றும் கார்த்தி இருவரையும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சூர்யா என்பவர் ஏற்கனவே வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். மற்றொரு நபரை தேடி வருகிறோம் என்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்